சென்னை: Viduthalai Twitter Review (விடுதலை ட்விட்டர் விமர்சனம்): நடிகர் சூரி நடித்துள்ள ‘விடுதலை’ படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
வெற்றிமாறன் கடைசியாக தனுஷை வைத்து அசுரன் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் பஞ்சமி நிலம் குறித்த உரையாடலையும் சமூகத்தில் தொடங்கிவைத்தது.
வெற்றிமாறனின் விடுதலை
வெற்றிமாறன் அசுரன் படத்துக்கு பிறகு விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது.ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையிலிருந்து லீட் எடுத்து அவர் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக தெரிகிறது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

ஹீரோவாக அறிமுகமாகும் சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படமே வெற்றிமாறனின் படம் என்பதால் அவருக்கு இப்படம் மிகப்பெரிய அங்கீகாரமாக அமையும் என கூறி பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதேசமயம் நான் கதையின் நாயகன் இல்லை என சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இன்று ரிலீஸான விடுதலை
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருந்த விடுதலை படம் (முதல் பாகம்) இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. வெற்றிமாறனின் படம் என்பதால் ரசிகர்களும் திரையரங்குகளுக்கு சென்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவருகிறார். அப்படி இதுவரை பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அதுகுறித்த தொகுப்பு.

நிறைய குறியீடுகள் இருக்கின்றன
விடுதலை படத்தின் முதல் பாகம் – இடைவேளை அருமையாக இருக்கிறது. ஓப்பனிங் ஷாட் நன்றாக இருக்கிறது என கூறி ஃபயர் விட்டிருக்கும் ரசிகர் சூரியின் நடிப்புக்கு தம்ப்ஸ் அப் கொடுத்திருக்கிறார். அதேபோல் விடுதலை உலகத்திற்கு நல்ல அறிமுகம் எனவும், ஏகப்பட்ட குறியீடுகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.

முதல் பாதி சூப்பர்
விடுதலை படம், ப்ளாக்ஸ் பஸ்டர் என குறிப்பிட்டு ட்விட்டரில் ஃபயர் விட்டிருக்கும் இந்த ரசிகர் விடுதலை படத்துக்கு 5 மதிப்பெண்களுக்கு 4 மதிப்பெண்ணை கொடுத்து தனது ரேட்டிங்கை தரமாக கொடுத்திருக்கிறார் இந்த ரசிகர். இவர் கொடுத்திருக்கும் ரேட்டிங்கை பார்த்த படத்தை பார்க்காதவர்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கிறதா என்று எக்சைட் ஆகியிருக்கின்றனர்.

விஜய் சேதுபதியின் தரமா ஃபெர்பார்மன்ஸ்
விடுதலை படத்தின் இடைவேளை காட்சியை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கும் இந்த ரசிகர், படத்தின் ஓப்பனிங் சீனுக்கும், சூரியின் நடிப்பையும் வெகுவாக புகழ்ந்திருக்கிறார். அதேபோல் விஜய் சேதுபதியின் நடிப்புக்கும் ஃபயர் விட்டிருக்கிறார். மேலும், முதல் பாதி சூப்பர் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இளையராஜாவின் பின்னணி இசை சுமார்தான்
இடைவேளைவரை படம் மிக அருமையாக இருக்கிறது. எமோஷன்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. ஆனால் பின்னணி இசை சுமாராகத்தான் இருக்கிறது. பாடல்கள் நன்றாக இருக்கின்றன என தியா என்ற ரசிகை குறிப்பிட்டிருக்கிறார். எனவே இளையராஜா இதில் சொதப்பிவிட்டாரா எனவும் சிலர் கேள்வ் எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

நிறைய எதிர்பார்த்தோம் ஆனாலும்
எனது அபிமானத்திற்குரிய வெற்றிமாறனிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என இந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ரசிகரின் விமர்சனம்தான் இதுவரை வந்த விமர்சனங்களில் விடுதலை படத்துக்கு வந்த முதல் நெகட்டிவ் விமர்சனமாக கருதப்படுகிறது.

விடுதலை – ஏமாற்றம்
அதேபோல் செந்தமிழ் என்ற ரசிகர் விடுதலை படத்தின் முதல் பாகம் ஏமாற்றம் என குறிப்பிட்டு சோக ஸ்மைலி போட்டு தனது ஏமாற்றத்தை பதிவு செய்திருக்கிறார். இருப்பினும் மற்றொரு ரசிகர் வெற்றிமாறன் காவல் துறையின் அராஜகத்தை மீண்டும் காட்சிப்படுதியிருக்கிறார்” என புகழ்ந்திருக்கிறார்.