திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் போன்ற விசேஷ நாட்களில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுப்பு விடப்பட்டு வருகின்றது.
இதுதவிர அந்தந்த மாவட்ட கோவில் திருவிழா போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படும்.
அந்த வகையில், நாளை மறுநாள் (ஏப்ரல் 4-ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி, சிவகங்கை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை மீறி திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.