உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இதுவரை 262 உக்ரைனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கிய விளையாட்டு வீரர்கள்
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான இராணுவ தாக்குதல் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது.
போர் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் ரஷ்ய படைகளை எதிர்த்து ஆண்கள், பெண்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ஆயுதங்களை கையில் எடுத்து போராடி வருகின்றனர்.
Reuters
இந்நிலையில் ரஷ்யாவின் போர் தாக்குதலில் சுமார் 262 விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனின் விளையாட்டு துறை அமைச்சர் Vadym Huttsait தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனில் உள்ள 363 விளையாட்டு வசதி நிலையங்களை ரஷ்ய படைகள் அழித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா பங்கேற்க அனுமதிக்க கூடாது
இந்த புள்ளி விவரங்களை சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனத்தின் தலைவர் மொரினாரி வதனாபே-வை உக்ரைனின் விளையாட்டு துறை அமைச்சர் Huttsait சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
Reiters
அத்துடன் வரவிருக்கும் 2024 ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் விளையாட அனுமதிக்க கூடாது என்றும் Huttsait கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர்கள் அனைவரும் ரஷ்யாவின் ராணுவ அத்துமீறலை ஏற்றுக் கொள்கிறார்கள் மற்றும் அதில் பங்கேற்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.