கோகோ-கோலா நிறுவனம் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் டொலர் மதிப்புள்ள தூய கோகனை சட்டவிரோதமாக உற்பத்தி செய்து விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோகோ-கோலா நிறுவனம்
உலகின் மிக பிரபல நிறுவனமான கோகோ-கோலா(coco-cola) நிறுவனம் அமெரிக்காவால் நிறுவப்பட்டது. இந்த பானத்தின் சுவை கோகா(coca) என்ற இலையிலிருந்து கிடைக்கிறது.
இந்த இலைகளை கொண்டு கோகோ-கோலா பானத்திற்கான மூலப்பொருட்களை எடுக்கும் போது அதிலிருந்து தூய கோகோயினை(cocaine) உற்பத்தி செய்கிறது. இந்த மூலப்பொருள் தயாரிப்பு ஸ்டீபன் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு சிறிய ரசாயன ஆலையால் தயாரிக்கப்படுகிறது.
@afp
இது மாமத் குளிர்பான நிறுவனத்தின் சார்பாக அமெரிக்காவிற்கு கோகோ இலைகளை இறக்குமதி செய்வதற்கான பிரத்யேக உரிமத்தை பெற்றுள்ளது.
@et bureau
நியூ ஜெர்சியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலையில் கோகா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் ’de-cocainised’ தான் பிரபலமான பானமான கோகோ-கோலாவில் பயன்படுத்தப்படுகிறது.
சட்ட விரோத தயாரிப்பு
கோகோயின் துணை தயாரிப்பு பின்னர் அமெரிக்காவின் மிகப்பெரிய ஓபியாய்டு உற்பத்தியாளரான மல்லின்க்ரோட் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது, இது பல் மருத்துவர்களுக்கு மயக்க மருந்தாக சந்தைப்படுத்துகிறது.
இந்த நிலையில் ஸ்டீபன் நிறுவனம் சட்டவிரோதமாக கோகோயினை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
@Viva La Coca
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்டீபன் நிறுவனம் சட்டவிரோதமாக பொருளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வெற்றிகரமாக புதுப்பித்தது, அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே அமெரிக்க நிறுவனமாக அதன் நிலையை தக்க வைத்துக் கொண்டது, என டெய்லி மெயில் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் எவ்வளவு கோகாவை இறக்குமதி செய்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் 1980களில் நியூயார்க் டைம்ஸ் ஒவ்வொரு ஆண்டும் 500 மெட்ரிக் டன் இலைகளுக்கு மேல் இருக்கும் என அறிவித்துள்ளது.
@gov.uk
இன்று, இணையத்தில் மருந்துப் பட்டியல்களின்படி, அது சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் சட்டவிரோதமாக கோகோயின் உற்பத்தி செய்யப்படுகிறது.