திரு நிலாத்திங்கள் துண்டம் திருகச்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாகப் பயன்பட்ட மேருமலையைத் தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி(பாம்பு), ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. தேவர்கள் பல சிகிச்சைகளைச் செய்தும் பயனில்லாமல் போனது. கலங்கிய மகாவிஷ்ணு தனது உடல் பழைய நிறம் பெற […]
