மும்பை: மும்பை விமான நிலையத்தில் எம்பி ராகவ் சந்தாவும், நடிகை பரினீதி சோப்ராவும் ஒன்றாக வந்ததால் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சந்தாவும், பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும் கடந்த சில வாரங்களாக அரசியல் மற்றும் சினிமா துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர். இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்றிரவு மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வந்தனர்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேறி காரில் சென்றனர். முன்னதாக பரினீதியும், ராகவ்வும் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தாகவும், அப்போது ஒருவரையொருவர் சந்தித்து நண்பர்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இருவரின் உறவு மற்றும் திருமணம் பற்றிய வதந்திகள் குறித்து, இருதரப்பிலும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. அதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.