சென்னை : நடிகை ரம்யா பாண்டியன் தாத்தாவின் 93வது பிறந்த நாளில் அவருக்கு அழகான வாழ்த்து கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக கலக்கி வந்த ரம்யா பாண்டியன் தற்போது சிவி குமார் இயக்கும் இடும்பன்காரி படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர், நண்பகல் நேரத்து மயக்கம் என்ற மலையாளம் படத்தில், மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகை ரம்யா பாண்டியன்
மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தி ரசிகர்கள் மனதில் இடையழகியாக பதிந்து விட்ட ரம்யா பாண்டியன் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானலும் ரம்யா பாண்டியனின் நடிப்பு பேசப்பட்டது. அதே போல நண்பகல் நேரத்து மயக்கம் படமும் பேசப்பட்டது. நல்ல கதைகளாக இருந்த போதும் இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையவில்லை.

கைவசம் உள்ள படம்
தற்போது இவரின் கைவசம் இடும்பன்காரி திரைப்படம் மட்டுமே உள்ளது. படவாய்ப்பு இல்லை என்றாலும் அதைப்பற்றி கவலைப்படாத ரம்யா பாண்டியன் இணையத்தில் தன்னை நம்பி இருக்கும், இரண்டு மில்லியன் பாலோவர்களை ஏமாற்றாமல் தொடர்ந்து போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாகவே வைத்து இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில்
தற்போது, ரம்யா பாண்டியன் தனது தாத்தாவின் 93வது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடி உள்ளார். மேலும் தாத்தாவோடு இருக்கும் போட்டோவை வெளியிட்டு, நேர்மை, கடின உழைப்பு, நண்பர், தத்துவஞானி ஆலோசகர் என பல பரிமானங்களை கொண்டவர். 42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் நம் தேசத்திற்கு சேவை செய்துள்ளார். உங்கள் நற்பண்புகள் தான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்.

ஐ லவ் யூ தாத்தா
மேலும், செய்யும் வேலையில் கவனத்துடன் இருந்தால் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை உங்கள் வாழ்க்கை ஒரு உதாரணம். நீங்களும், உங்கள் வாழ்க்கையும் வரவிருக்கும் தலைமுறைக்கும் ஒரு பாடமாக இருக்கிறீர்கள் தாத்தா.. மீண்டும் ஒருமுறை, லவ் யூ தாத்தா என தனது தாத்தாவுக்கு அழகாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரம்யாபாண்டியனின் குடும்பத்தினர் அனைவரும் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
நடிகை ரம்யா பாண்டியன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் பைனல் வரை சென்ற அவர் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டில் நுழைந்தார். ஆனால் அதிலும் டைட்டிலை வெல்ல முடியவில்லை.