எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த விடுதலை படம் மார்ச் 31ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் பார்த்த அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தளபதி விஜய் படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து ஆடிய சூரி இன்று ஹீரோவாகிவிட்டார்.
சூரியின் நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டோம். சூரிக்கு இனி நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதே சமயம் இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சூரி அடம்பிடிக்கக் கூடாது. அப்படி அடம்பிடித்தால் அவரின் கெரியர் நாசமாகிவிடும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
விடுதலை படத்தில் தென்றல் ரகுநாதன் ஆடையில்லாமல் நடித்த காட்சி குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இந்நிலையில் அந்த காட்சியில் நடித்தது பற்றி பேட்டி கொடுத்திருக்கிறார் தென்றல்.
அந்த பேட்டியில் தென்றல் கூறியதாவது,
வெற்றிமாறன் சார் செங்கல்பட்டில் படப்பிடிப்பில் இருந்தார். இரவு 7 மணி அளவில் அவரை சந்தித்து பேசினேன். சரிமா சொல்றேன், வந்துடுங்க என்றார். வசனம் பேசுங்க என்று எல்லாம் சொல்லவில்லை. மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
நான் கதை, கதாபாத்திரம் பற்றி எதுவுமே கேட்கவில்லை. ஏனென்றால் இது வெற்றிமாறன் சாரின் படம்.
காவல் நிலைய காட்சி என்றார்கள். ஆனால் ஆடையில்லாமல் நடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லவில்லை. ஸ்பாட்டில் தான் கூறினார்கள். கதைக்கு தேவைப்படுகிறது. அதனால் அப்படி நடிக்கிறோம் என்று தோன்றியது. ஆனால் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வு இருந்தது.
நான் ஒன்றும் ஆடையில்லாமல் நடிக்கவில்லை. சிஜியில் எடிட் பண்ணி தான் அந்த மாதிரியான காட்சிகளை காண்பித்தார்கள். அப்படி நடிக்கிறோமே என தயக்கமாகவோ, பயமாகவோ இல்லை. கதைக்கு தேவைப்பட்டது.
நான் தான் ஹீரோயினின் அம்மா என்பதே எனக்கு தெரியாது. டப்பிங்கின்போது தான் தெரியும் என்றார்.
விடுதலை படத்தில் ஜி.வி. பிரகாஷின் சகோதரி பவானிஸ்ரீ தான் ஹீரோயின். படம் பார்த்த அனைவரும் பவானிஸ்ரீயின் நடிப்பை பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள். சூரி தானே, அவருக்கெல்லாம் ஜோடியாக நடிக்க முடியாது என பவானிஸ்ரீ சொல்லாதது நல்லதாகிவிட்டது. ஒரே படம் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
விடுதலை விமர்சனம்
இத்தனை ஆண்டுகளாக காமெடியனாக வலம் வந்த சூரி விடுதலை படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தில் ஒரு இடத்தில் கூட இது காமெடியன் சூரி தானே என்று சொல்ல முடியாத அளவுக்கு திறமையாக நடித்திருக்கிறார். இரண்டாம் பாகத்தில் அவரின் நடிப்பை பார்த்து ரசிக்க அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி நடித்த வாத்தியார் கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்ததால் அவரால் குளிரை தாங்கிக் கொண்டு நடிக்க முடியாமல் போனது. இதையடுத்தே விஜய் சேதுபதியை வாத்தியாராக்கினார் வெற்றிமாறன்.
Viduthalai: வெற்றிமாறனின் விடுதலை எப்படி?: திருமாவளவனின் ஸ்பெஷல் விமர்சனம்
கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுவிட்டார் வாத்தியார் விஜய் சேதுபதி. இந்நிலையில் விடுதலை படம் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.