சென்னை : நடிகர் விஜய் எப்போதுமே தன்னை ட்ரெண்டிங்கில் வைத்து வருபவர். அவர் விட்டாலும் அவரது ரசிகர்கள் அவரை சும்மா விட மாட்டார்கள்.
நிஜத்தில் மிகவும் அமைதியான விஜய், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்தான். எப்போதும் அவரது நடிப்பில் ஒரு ஆர்ப்பரிப்பு இருக்கும்.
கடந்த 2013ம் ஆண்டில் விஜய் ட்விட்டரில் இணைந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் சர்வதேச அளவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருந்து வருகிறார். ஏராளமான ரசிகர்களின் பேவரிட்டாக உள்ளார். அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். ஏற்கனவே வெற்றிகரமாக வலம்வரும் இயக்குநர்களுக்கு மட்டுமில்லாமல் புதியவர்களுக்கும் தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார். இதில் சில படங்கள் சொதப்பினாலும் தன்னுடைய முயற்சியை எப்போதும் அவர் கைவிட்டதில்லை.

அமைதியான விஜய்
விஜய் எப்போதும் கலகலப்பாக பேசுபவர் இல்லை. மிகவும் அமைதியானவர். அவரது நடிப்பில் மட்டுமே, அந்தக் கேரக்டருக்காக தன்னை உற்சாகமானவராக மாற்றிக் கொள்வார். அவரை திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு அவரது உற்சாகம் பற்றிக் கொள்ளும்வகையில் அவரது நடிப்பு இருக்கும். குறிப்பாக பாடல்களில் சிறப்பான டான்ஸ் மூவ்மெண்ட்சையும் அசால்ட்டாக செய்து அசத்துவார். போகிற போக்கில் காமெடியும் செய்வார்.

அதிகம் பேசாதவர்
அதிகமான பேசாத நபர் என்பதால் சமூக வலைதளங்களிலும் விஜய்யை அதிகமாக பார்க்க முடியாது. கடந்த 2013ம் ஆண்டில் ட்விட்டரில் இணைந்தாலும் இந்த 10 ஆண்டுகளில் தன்னுடைய படங்களின் ட்ரெயிலர், சில முக்கிய நபர்களுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்ட அளவிலேயே இவரது ட்விட்டர் அக்கவுண்ட் காணப்படுகிறது. இவரை 44 லட்சம் பேர் ட்விட்டரில் பாலோ செய்து வருகின்றனர். ஆனால் அவர் இதுவரை யாரையும் பாலோ செய்யவில்லை.

இன்ஸ்டாகிராமில் இணைந்த விஜய்
இந்நிலையில் இன்றைய தினம் விஜய் திடீரென இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். அவர் இணைந்தது தெரிந்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களையும் அவரது பாலோயராக இணைத்து வருகின்றனர். 99 நிமிடங்களில் விஜய் 1 மில்லியன் பாலோயர்களை எட்டியுள்ளார். முன்னதாக வடகொரிய பாடகர் வி 43 நிமிடங்களிலும் ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி 59 நிமிடங்களிலும் ஒரு மில்லியன் பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்றிருந்ததே சாதனையாக கருதப்பட்டது. அந்த வரிசையில் தற்போது விஜய்யும் இணைந்துள்ளார்.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விஜய்
இன்ஸ்டாகிராமில் விஜய் இணைந்ததையடுத்து ட்விட்டரிலும் அவர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார். #ThalapathyOnINSTAGRAM என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனுடன் #LeoFilm என்ற ஹேஷ்டேக்கும் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே உள்ளது. எப்போதுமே விஜய் மாஸ்தான் என்பதை அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. விஜய்யின் லியோ படத்தின் சென்னை சூட்டிங் வரும் 4ம் தேதி துவங்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.