பாம்பனில் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் போன் வைத்திருந்த நபர் கைது..!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் சிக்னல் வந்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட உளவுத்துறை அதிகாரிகள், பாம்பனை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். 

ஜான்பவுல் என்ற அந்த நபர், குந்துகால் கடற்கரை அருகே கீழே கிடந்த சேட்டிலைட் போன், இலங்கை ரூபாய் நோட்டுகள் மற்றும் இலங்கை தேசிய அடையாள அட்டையை எடுத்து வைத்திருந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாள அட்டையை சோதனை செய்தபோது, அது கொழும்புவை சேர்ந்த சுனிமல் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர் மீது இலங்கையில் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

சுனிமல், இலங்கையிலிருந்து தப்பி கடல்வழியாக தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என்பதால், உளவுத்துறை அதிகாரிகள் கடலோர பகுதியில் அவரை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.