உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள்! ஸ்காட்லாந்தில் அடுத்த மாதம் சேவை தொடக்கம்


உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் ஸ்காட்லாந்தில் இயக்கப்படவுள்ளன.

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள்

ஸ்காட்லாந்தின் சாலைகளில், அடுத்த மாதம் ஃபோர்த் ரோடு பாலத்தின் மீது பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் (Driveless buses) உலகில் முதல்முறையாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 15-ஆம் திகதி முதல் 5 ஒற்றை அடுக்கு பேருந்துகள், Fife-ல் உள்ள Ferrytoll Park and ride மற்றும் Edinburgh Park இடையில் 14 மைல் கொண்ட இந்த வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளனது. இந்த ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் மூலம் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10,000 பயணிகள் சவாரி செய்வார்கள் என நம்பப்படுகிறது.

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள்! ஸ்காட்லாந்தில் அடுத்த மாதம் சேவை தொடக்கம் | Worlds First Driverless Buses Starts Scotland UkStagecoach

இரண்டு ஊழியர்கள் வேண்டும்

50 மைல் வேகத்தில் முன்-தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளில் இயங்கும் இந்த பேருந்துகளால் சென்சார்கள் பயன்படுத்தப்படும் என்றாலும், இரண்டு ஊழியர்கள் இன்னும் அவற்றை இயக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஓட்டுநரின் இருக்கையில் ஒரு பாதுகாப்பு ஓட்டுநர் அமர்ந்திருப்பார், அங்கிருந்து அவர் தொழில்நுட்பத்தைக் கண்காணிப்பார் மற்றும் பேருந்து கேப்டன் பயணிகளுக்கு டிக்கெட் வாங்குதல், ஏறுதல் மற்றும் கேள்விகளைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுவார்.

Project CAVForth எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம், முதல் சுயமாக ஓட்டும் பொதுப் பேருந்து சேவையாக இருக்கும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள்! ஸ்காட்லாந்தில் அடுத்த மாதம் சேவை தொடக்கம் | Worlds First Driverless Buses Starts Scotland UkStagecoach

ஸ்காட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட், “இந்த புதுமையான மற்றும் லட்சிய திட்டத்திற்கு இது ஒரு அற்புதமான மைல்கல், அடுத்த மாதம் CAVForth திட்டம் சாலைகளுக்கு வருவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்று கூறினார்.

இங்கிலாந்தின் மிகப்பெரிய பேருந்து மற்றும் கோச் ஆபரேட்டரான Stagecoach மூலம் இந்த சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள்! ஸ்காட்லாந்தில் அடுத்த மாதம் சேவை தொடக்கம் | Worlds First Driverless Buses Starts Scotland UkStagecoach



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.