சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். புதிய டிசைன், அசத்தல் கேமரா என இந்த போன் ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்.
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்.
- 6.72 இன்ச் திரை அளவு கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே.
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் / 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்.
- 5,000mAh பேட்டரி.
- 67 வாட்ஸ் SUPERVOOC சார்ஜிங் சப்போர்ட்.
- 80 வாட்ஸ் அதிவேக சார்ஜர்.
- 108 + 2 + 2 மெகாபிக்சல்களுடன் மூன்று கேமரா பின்புறம் இடம் பெற்றுள்ளது.
- முன்புறம் 16 மெகாபிக்சல் கொண்ட கேமரா உள்ளது.
- 5ஜி இணைப்பில் இந்த போன் இயங்கும்.
- இந்த போனின் விலை ரூ.19,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The #OnePlusNordCE3Lite has a 200% Ultravolume mode. Which those dual stereo speakers might look tiny, but they pack quite the punch.
Catch the #LargerThanLife launch, now: https://t.co/f9vzumUmNt pic.twitter.com/wWEUaba6hv— OnePlus India (@OnePlus_IN) April 4, 2023