தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று 196 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 91% பேருக்கு XBB வகை கொரோனா என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் XBB மற்றும் BA.2 வகை ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பால் இருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு இணை நோய்கள் இருந்ததால் அவர்கள் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மருத்துவமனைகளில் பிறந்தநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரனா தோற்றால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.