நர்சரி பாடசாலைக்குள் கோடரியுடன் நுழைந்த கொடூரன்: 4 குழந்தைகள் பரிதாப மரணம்


பிரேசில் நாட்டில் நர்சரி பாடசாலைக்குள் கோடரியுடன் நுழைந்த 25 வயது நபர் தாக்குதல் நடத்தியதில் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நர்சரி பாடசாலையில் கோடரி தாக்குதல்

பிரேசிலில் Santa Catarina மாகாணத்தில் Blumenau நகரத்தில் உள்ள Good Shepherd Center நர்சரி பாடசாலையில் உள்ளூர் நேரப்படி இன்று (புதன்கிழமை) காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

கையில் சிறிய கோடரியுடன் பாடசாலைக்குள் சுவரேறி குதித்து நுழைந்த 25 வயதான நபர் ஒருவர் திடீரென குழந்தைகள் மீது பயங்கர தாக்குதலை ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இரண்டு வயதுக்குட்பட்ட 4 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

நர்சரி பாடசாலைக்குள் கோடரியுடன் நுழைந்த கொடூரன்: 4 குழந்தைகள் பரிதாப மரணம் | Brazil Man Kills 4 Children Using Axe Preschoolanews

சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்த நிலையில், தாக்குதல்தாரி சரணடைந்ததாக கூறப்படுகிறது.

பெரும் அதிர்ச்சி

இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்த தாக்குதலை “அரக்கத்தனம்” என்று கண்டித்துள்ளார்.

இந்த “பயங்கரமான” தாக்குதலுக்காக மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று Santa Catarina ஆளுநர் ஜோர்ஜின்ஹோ மெல்லோ அறிவித்தார்.

நர்சரி பாடசாலைக்குள் கோடரியுடன் நுழைந்த கொடூரன்: 4 குழந்தைகள் பரிதாப மரணம் | Brazil Man Kills 4 Children Using Axe PreschoolREUTERS/ Denner Ovidio

அதிகரித்து வரும் வன்முறை

சமீப காலமாக பிரேசிலில் பாடசாலைகளில் வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், சாவ் பாலோவில் உள்ள ஒரு பாடசாலையில் 13 வயது சிறுவன் ஒரு ஆசிரியரை கத்தியால் தாக்கி கொன்றான்.

கடந்த ஆண்டு நவம்பரில், எஸ்பிரிடோ சாண்டோ மாநிலத்தில், தென்கிழக்கு நகரமான அராக்ரூஸில் இரண்டு பள்ளிகளில் இரட்டைத் தாக்குதல்களில் 16 வயதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நான்கு பேரைக் கொன்றார் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2019-ஆம் ஆண்டில், சாவ் பாலோவுக்கு வெளியே உள்ள சுசானோவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு முன்னாள் மாணவர்கள் எட்டு பேரை சுட்டுக் கொன்றனர், பின்னர் தற்கொலை செய்துகொண்டனர்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.