சென்னை : விடுதலை படத்தை பாராட்டி ட்வீட் போட்ட பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் வெச்சு செய்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
முதல் நான்கு நாள்களில் இந்தியா முழுவதும் மொத்தம் 14.60 கோடி ரூபாய் வசூலித்த இப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.
விடுதலை
விடுதலை படத்தில் வாத்தியார் என்ற வேடத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்க, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், தமிழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசை இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

குவியும் பாராட்டு
விடுதலை திரைப்படத்தை மக்கள் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் துயரம் குறித்தும், அதனால் பெண்களும் அப்பகுதி மக்களும் அனுபவிக்கும் வலியையும் இந்த படம் அழகாக பேசி உள்ளது. இந்த படத்தை சாதாரண மக்கள் முதல் அரசியல் கட்சித்தலைவர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பிரதீப் ரங்கநாதன் ட்விட்டர்
இந்த நிலையில் கோமாளி, லவ் டுடே படத்தின் மூலம் மக்களிடம் பிரபலமான இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலை படத்தை பார்த்துவிட்டு, விடுதலை சிறப்பான படம். இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிமாறன் சார்னு சொல்லுங்க
பிரதீப் ரங்கநாதனின் இந்த ட்விட்டரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தை பார்த்து பாராட்டித்தான் கருத்துப்போடுகிறீர்கள் அது பாராட்டுக்குரியது விஷயம் தான். இருந்தாலும், சமூகவலைத்தளத்தில் வெற்றிமாறனின் பெயரை குறிப்பிடும் போது தயவு செய்து வெற்றிமாறன் சார் என்று குறிப்பிடுங்கள் இது எனது வேண்டுகோள் அண்ணா என குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை தெரியாதா?
மேலும் சில நெட்டிசன்ஸ், வெற்றி மாறன் சார்னு சொன்னா கொறஞ்சிடுவியா ப்ரோ? என்றும் ஒரு படம் நல்ல போன போதுமே மரியாதை கிடையாதா என்றும் பிரதீப் ரங்கநாதனை கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர். இன்னும் சிலரோ பிரதீப், படத்தைப்பார்த்து பாராட்டி இருக்காரு இதுக்காக இப்படி அவரை விமர்சனம் செய்வது சரியில்லை என சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.