வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2023-ம் பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
கடந்த மார்ச் 22-ம் தேதி நடைபெற்ற முதல் விழாவில் 3 பத்ம விபூஷன், 4 பத்ம பூஷன் மற்றும் 47 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த நிலையில் இன்று (ஏப்.05) ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற 2-வது விழாவில் பத்ம விருதுகளை வழங்கினார்.
இதில் மறைந்த முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவ் சார்பில் அவரது மகன் அகிலேஷ் யாதவ் பத்ம விபூஷன் விருதை பெற்று கொண்டார். இவரை தவிர சுதாமூர்த்தி, எம்.எம். கீரவாணி, பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன், கல்வியாளர் ஆனந்த்குமார் உள்ளிட்ட விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.
Advertisement