ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இது ரயில் தான் உலகில் முதல் முதலாக ஓஎச்இ எனும் மேல் வழித்தட எலக்ட்ரிக் வயருக்கு கீழ் இயங்கும் அதிவிரைவு ரயிலாகும்.
இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த வந்தே பாரத் ரயில் 150 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க உள்ளது. மேலும் உலகில் முதல் முதலாக ஓஎச்இ எனும் மேல் வழித்தட எலக்ட்ரிக் வயருக்கு கீழ் இயங்கும் அதிவிரைவு ரயில் என்ற பெருமையை பெற உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மரில் இருந்து டெல்லி வரையிலான 428 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 5 மணி 15 நிமிடங்களில் ரயில் கடந்து செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 86 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். நாளை முதல் அஜ்மர் டூ டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் வழக்கமான சேவை தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.