மத்திய அரசின் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய அணு மின் கழகம் Executive Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
பதவி: Executive Trainees
காலிப்பணியிடங்கள்: 325
கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், பிஎஸ்சி (என்ஜினியரிங்), 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக் ஆகிய பட்டப் படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்ச வயது 28.04.2023 தேதியின் படி 26 வயதாக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: கேட் மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: முற்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் விண்ணப்பிக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் விண்ணப்பிக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்திய அணு மின் கழகத்தின் www.npcilcareers.co.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2023
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசிநாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.