அதிக வெப்பச்சலனம் காரணமாக 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளையும், அங்கன்வாடி மையங்களையும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை மூட ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக் ஜப்பானில் இருந்து திரும்பியவுடன் அவரது தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்தார்.
நேற்று மட்டும் ஒடிசா மாநிலத்தின் ஒன்பது இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், அதிக வெப்ப அலைகள் எழுகிற போது அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய எரிசக்தி துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.