சென்னை : சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி இன்றோடு 32ஆண்டுகள் ஆனநிலையில் இப்படத்திற்காக குஷ்பூ மற்றும் பிரபு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பி வாசு இயக்கத்தில் ஏப்ரல் 12ந் தேதி 1991ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் சின்னத்தம்பி. இப்படத்தில் குஷ்பு, பிரபு , மனோரம்மா, ராதாரவி, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்திருப்பார்கள்.
இளையராஜாவின் இசையில் அனைத்துப்பாடல்களும் தரமானதாக இருக்கும். ஆண்டுகள் பல உருண்டு ஓடினாலும் இளையராஜாவின் ஹிட் பாடல் வரிசையில் இந்த பாடல்கள் நிச்சயம் இடம் பிடித்து இருக்கும்.
நடிகை குஷ்பூ : தர்மத்தின் தலைவன், வெற்றி விழா, வருஷம் 16,கிழக்கு வாசல் போன்ற படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வந்த குஷ்பூக்கு சின்னத்தம்பி திரைப்படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி தந்த திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
சின்னத்தம்பி : இந்த படத்தில் பாட்டு மட்டுமே பாடத்தெரிந்த பிரபு, தாலினா என்ன, கல்யாணம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு வெகுளித்தனமானவராக இருக்கிறார். இந்த படத்தில் குஷ்பூ மற்றும் பிரபுவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி இன்னோடு 32 ஆண்டுகள் ஆனதை குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
வாழ்த்திய பேன்ஸ் : அதில், சின்னத்தம்பி, தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். என் இதயம் எப்போதும் வாசு மற்றும் பிரபு ஆகியோருக்காக துடிக்கும் என்று பதிவிட்டு இருந்தார். மேலும்,சின்னத்தம்பி படம் பார்த்து குஷ்பூக்கு கோவில் கட்டிய 90ஸ் ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறிவருகின்றனர்.

ஓராண்டு ஓடிய சின்னதம்பி : இந்நிலையில், சின்னத்தம்பி திரைப்படத்தில் நடித்தற்காக குஷ்பூ மற்றும் பிரபு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் பிரபுக்கு ரூபாய் 11 லட்சம் சம்பளமும், நடிகை குஷ்பூக்கு ரூபாய் 4 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 91ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் திரையரங்கில் ஓராண்டுக்கு மேல் ஓடி உள்ளது. 80லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 9கோடியே 20 லட்சத்தை வசூலித்துள்ளது. அந்த காலகட்டத்தில் இதுமிகப்பெரிய வசூல் ஆகும்.