"குரூரம்".. எலியை அணு அணுவாக கொன்று ரசித்த 'சைக்கோ'.. இத்தனை வருட ஜெயில் தண்டனையா..? சபாஷ்

லக்னோ:
எலியை அணு அணுவாக சித்ரவதை செய்து கொன்ற இளைஞருக்கு எதிராக 30 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த வழக்கில் அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்கிற விவரம் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் புதோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (23). கூலி வேலை செய்து வருகிறார். பொதுவாகவே, மனோஜ் குமாருக்கு எந்த விலங்குகளை கண்டாலும் பிடிக்காதாம். அமைதியாக ஒரு ஓரத்தில் படுத்துக் கிடக்கும் நாயை பார்த்தால் கூட அதை பெரிய கற்களை கொண்டு தாக்குவது, மாடுகளை இரும்புக் கம்பியால் அடிப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

எலியை பார்த்ததும் “வெறி”

இந்நிலையில், மனோஜ் குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு ஒரு எலி அங்கேயும் இங்கேயும் ஓடிச் சென்றுள்ளது. வாயில்லா ஜீவன்களை பார்த்தால்தான், மனோஜ்குமாருக்கு வெறி வந்துவிடுமே.. உடனே அந்த எலியை விரட்டி பிடித்த மனோஜ்குமார், அதை சித்ரவதை செய்ய தொடங்கினார்.

அணு அணுவாக சித்ரவதை

அந்த எலியின் வாலை பிடித்தபடி, தான் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டால் அதன் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். பிறகு, அதன் வாலில் கல்லை கட்டி அங்கிருக்கும் சாக்கடையில் அதை முழ்கடித்துள்ளார். இந்த சித்ரவதையை அனுபவித்த அந்த வாயில்லா ஜீவன் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்துள்ளது. வாயில்லா ஜீவனை கொன்றதோடு மட்டுமல்லாமல், ஏதோ சாதனை செய்ததை போல அதை வீடியோவும் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் மனோஜ் குமார்.

30 பக்க குற்றப்பத்திரிகை

இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், விலங்குகள் நல ஆர்வலரான விதேந்திர குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த போலீஸார், உதான் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனோஜ்குமார் மீது 30 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

5 ஆண்டு வரை ஜெயில்..

இந்நிலையில், மனோஜ் குமார் மீதான குற்றம் நிரூபணமானால், மிருகவதை தடுப்புச் சட்டம், வாயில்லா ஜீவனை கொலை செய்தல், மோசமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவருக்கு குறைந்தது 5 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.