பிறந்தநாளுக்கு இரவு பார்ட்டி வைத்த சோனியா அகர்வால்..ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன் வெளியாக புகைப்படம்!

சென்னை : நடிகை சோனியா அகர்வால் தனது பிறந்தநாளுக்கு பாரில் நைட் பார்ட்டி வைத்துள்ளார். அந்த பார்ட்டியில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு பார்ட்டியை சிறப்பித்துள்ளனர்.

காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.

அதன் பின் செல்வராகவன் இயக்கத்தில் ஹிட் படங்களான ரெயின்போ காலனி, புதுக்கோட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகை சோனியா அகர்வால் : 7ஜி ரெயின்போ படத்தில் வரும் நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்…உன்னால் தானே நானே வாழ்கிறேன் என்ற பாடலில் அழகு பதுமையாக வலம் வரும் சோனியா அகர்வாலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இன்று வரை காதல் பிரியர்களின் பேவரைட் பாடலாக இந்த பாடல் உள்ளது.

Actress sonia agarwal birthday party photos trending on social media

செல்வராகவனை பிரிந்தார் : செல்வராகவனுடன் படங்களில் இணைந்து நடித்த போது இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை தொடங்கிய அவர்கள் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர். சோனியவை விவாகரத்து செய்த பின் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகனும் உள்ளனர்.

அடுத்தடுத்த படங்களில் : விவாகரத்துக்கு பின் சோனியா அகர்வால் ஒரு சில படங்களில் நடித்து வந்தார், அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கிய க்ரைம், த்ரில்லர் படமான கிராண்மா திரைப்படத்திலும், WARD 126, பிரபுதேவாவுடன் பஹிரா படத்திலும் நடித்தார். மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான Fall என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் தொடருக்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.

Actress sonia agarwal birthday party photos trending on social media

பிறந்த நாள் பார்ட்டி : இந்நிலையில், நடிகை சோனியா அகர்வால் தனது 41வது பிறந்த நாளை, கோலாகலமாக கொண்டாடி உள்ளார். பாரில் நடந்த இரவு பார்ட்டியில் நடிகர் வினய், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு சோனியா அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த பார்ட்டியில் நடிகை சோனியா அகர்வால் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து இருந்தார். இந்த பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன் ஆட்டம் போட்டுள்ளார். இந்த போட்டோக்களை சோனியா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.