புத்தாண்டு காலத்தை முன்னிட்டு போக்குவரத்து சேவை தொடர்பான அறிவிப்பு

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (12) விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

அதன்படி, புத்தாண்டு காலத்திலும் மேலதிக பேருந்துகளை இயக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பொது முகாமையாளர் பண்டுக சவர்ணஹன்ச தெரிவித்தார்.

இதேவேளை, நாளை 13ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைப் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இன்றும் சில விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 7.30 மற்றும் காலை 6.30 மணிக்கும், பதுளையில் இருந்து கோட்டை வரை மாலை 5.20 மற்றும் காலை 7.00 மணிக்கும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.