Khushbu: சின்னதம்பி ரிலீஸாகி இன்றுடன் 32 வருஷமாச்சு: ஆனால் குஷ்புவுக்கு வயசு மூவாறு தான்

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
பி. வாசு இயக்கத்தில் இளைய திலகம் பிரபு, குஷ்பு, ராதாரவி, மனோரமா உள்ளிட்டோர் நடித்த சின்னதம்பி படம் கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அப்பாவி சின்னதம்பியாக பிரபுவும், அழகு தேவதை நந்தினியாக குஷ்புவும் நடித்திருந்தார்கள். இசைஞானி இளையராஜாவின் இசையில் அந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களும் ஹிட்டாகின.

இப்படி ரசிகர்களை கட்டிப் போட்ட சின்னதம்பி படம் ரிலீஸாகி இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சின்னதம்பி படம் ரிலீஸாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நம்ப முடியவில்லை. ரசிகர்கள் காட்டிய அன்புக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பி. வாசு, பிரபு சாருக்கு நன்றி. படத்தை தயாரித்தற்காக மறைந்த கே. பாலுவுக்கும், அருமையான இசையை அளித்த இளையராஜா சாருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

அனைவரின் இதயங்களிலும் நந்தினி இருக்கிறாள். மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். #32yrsofChinnaThambi❤ என தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம். அண்மையில் கூட சின்னதம்பி படம் பார்த்தேன். கிளைமாக்ஸ் காட்சியில் குஷ்பு அழுவதை பார்த்து அழுதுவிட்டேன். என்ன ஒரு சிறப்பான நடிப்பு.

சின்னதம்பி பட பாடல்களை வாரத்திற்கு ஒரு முறையாவது கேட்டுவிடுவேன். சின்னதம்பிக்கு பிறகே குஷ்புவுக்கு திருச்சியில் கோவில் கட்டினார்கள். குஷ்பு போன்று வேறு எந்த நடிகைக்கும் இந்த அளவுக்கு கிரேஸ் இல்லை.

சின்னதம்பி படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறோம் என்றே சொல்ல முடியாது. அத்தனை முறை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு முறை கூட போர் அடித்தது இல்லை. உங்களின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அந்த நந்தினியை மறக்கவே முடியாது. நேற்று கூட சின்னதம்பி படம் பார்த்தோம். இனிய நினைவுகள் மட்டுமே.

32 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று எங்களாலும் நம்ப முடியவில்லை. சின்னதம்பி படத்தில் பார்த்தது போன்று தான் இன்னும் இருக்கிறீர்கள் குஷ்பு.

தமிழ் சினிமா வரலாற்றில் புயலை கிளப்பி படம் என்று நீங்கள் சொல்வது மிகவும் சரி. தியேட்டரிலேயே பல முறை பார்த்த படமாச்சே. மறந்து விடுமா என தெரிவித்துள்ளனர்.

சின்னதம்பி படத்தில் வந்த அரைச்ச சந்தனம் பாடலில் என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு

பலிக்கும் பாரு என்று பிரபு பாடியிருப்பார். அவர் சொன்னது பலித்துவிட்டது. குஷ்புவை இன்று பார்த்தாலும் 18 வயது பெண் போன்று தான் இளமையாகவும், மிகவும் அழகாகவும் இருக்கிறார்.

Rajinikanth: அந்த கேரக்டரில் ரஜினிஜியை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது: ஷங்கருக்கு நோ சொன்ன ஆமீர் கான்

இரண்டு வளர்ந்த மகள்களுக்கு அம்மா என்று சொல்ல முடியாது. அக்கா என்று சொல்லும் அளவுக்கு தான் எக்கச்சக்க அழகாக இருக்கிறார் குஷ்பு. அவர் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் பியூட்டி ஆகிவிட்டார்.

மாடர்ன் உடையும் சரி, சேலையும் சரி குஷ்புவுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது. அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸுகள் வந்து குவியத் தான் செய்கிறது. இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார் குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.