Rajini: மீண்டும் பழைய ரஜினியாக மாறும் தலைவர்..அசந்துபோன கோலிவுட்.!

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இயக்குனர் நெல்சனுக்கும், ரஜினிக்கும் கட்டாயம் தற்போது ஒரு வெற்றி தேவை என்பதால் இப்படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.

மேலும் ரஜினி நெல்சனிடம், எந்த பதட்டமும் இன்றி டைம் எடுத்து படத்தை சிறப்பாக எடுக்குமாறு கூறியுள்ளதால் எந்த பதட்டமும் இல்லாமல் நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார். இதையடுத்து ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

Leo: லியோ படப்பிடிப்பில் ரசிகர்களின் செயலால் கடும் அப்சட்டில் தளபதி விஜய்..!

லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். கிட்டத்தட்ட 30 முதல் 45 நிமிடங்கள் வரை ரஜினி இப்படத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இவ்விரு படங்களையும் தொடர்ந்து ரஜினி ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.

https://news.google.com/publications/CAAqBwgKMPOGqQsw5ZHBAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து பொதுவாக ரஜினி ஒரு படம் முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு தான் அடுத்த பட வேலைகளை துவங்குவார். ஆனால் தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் ரஜினி ஓய்வில்லாமல் நடித்து வருவது திரைத்துறையை சார்ந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ரஜினி தற்போதும் ஓய்வின்றி உழைத்து வருவதை பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் ரஜினி அதனை முடித்துவிட்டு லால் சலாம் படத்திற்காக மும்பை பறக்க இருக்கின்றார்.

இதைத்தொடர்ந்து லால் சலாம் படத்தில் நடித்துக்கொண்டே ரஜினி ஞானவேலின் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க இருக்கின்றார். எனவே அடுத்தாண்டு ரஜினியின் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இப்படங்களை முடித்துவிட்டு ரஜினி லோகேஷின் இயக்கத்தில் தன 171 ஆவது படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பதால் தற்போது தொடர் வெற்றிகளை கொடுத்து தான் யார் என நிரூபிக்கும் முனைப்பில் ரஜினி கடுமையாக உழைத்து கொண்டிருக்கின்றார். அவரின் இந்த உழைப்பிற்கு கண்டிப்பாக மிகப்பெரிய பலன் கிடைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.