சென்னை : மம்மூட்டி எனக்கு பண்ண துரோகம் என்று நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
90களில் ஷகிலா என்ற பெயரை கேட்டதுமே, அனைத்து இளவட்டங்களும் ஏகத்திற்கும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டிவந்தார் ஷகிலா.
அந்த காலத்தில் மற்ற டாப் நடிகர்களின் படங்களைவிட ஷகிலாவின் படம் வசூலை அள்ளும். இதனாலேயே பல தயாரிப்பாளர்கள் இவரின் வீட்டின் வாசலில் காத்திருந்தனர்.
நடிகை ஷகிலா : கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்த ஷகிலாவை, குக் வித் கோமாளியில் அனைவரும் பாசத்தோடு அம்மா என்று அழைத்து ஷகிலாவை மகிழ்ச்சி அடையச் செய்தனர். தற்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஷகிலா, இத்தனை ஆண்டுகளாக வெறுமையில் வாழ்ந்து வந்தேன். ஆனால் அனைவரும் ஷகிலா அம்மா என்று அழைக்கும் போது வாழ்க்கைக்கான ஒரு அர்த்தம் புரிகிறது.
துரோகம் செய்தார்கள் : தொடர்ந்து பேசிய ஷகிலா மலையாளத்தில் நான் நடித்த படங்கள் சென்சார் முடிந்து வந்த பிறகு, சில பிட் காட்சிகளை அதில் சேர்த்துள்ளனர். இந்த விஷயம் எனக்கு தெரிந்ததும் என்னை ஏமாற்றி விட்டார்களே, எனக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று அனைவர் மீதும் எனக்கு கடுமையான கோபம் இருந்தது.
அட்வான்சை திருப்பிக் கொடுத்தேன் : அது மட்டுமில்லாமல் நான் நடித்த 23 படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் கொடுக்காமல் வைத்து இருந்தார்கள். இதனால், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதால், இனி மேல் அதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டேன். மேலும் 22 படங்களுக்கு வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்தேன். மலையாள படங்களில் நடிப்பதை 2001ல் இருந்தே நிறுத்தி விட்டேன் கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகிவிட்டது இப்போதும் என்னை பழைய ஷகிலாவாகவே பார்க்கிறார்கள்.

மம்முட்டி சதி செய்தார் : மம்முட்டி என்னுடைய படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தினார், படம் வெளிவராமல் தடுத்தார் என்று பலர் கூறி நான் கேள்விப்பட்டேன். மம்முட்டி மேலே எனக்கு கோபமில்லை, அவருடைய கோபம் நியாயமானது தான். அவர்கள் 5 கோடி செலவு செய்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் பத்து லட்சத்தில் படம் எடுக்கிறோம். 10 லட்சம் ரூபாய் பணம் 4 கோடி படத்தை காலி பண்ணால் யாருக்கு தான் கோபம் வராது அப்படித்தான் என் மீது அவருக்கு வருத்தம் இருந்திருக்கும் என்று பேட்டி ஒன்றில் ஷகிலா பேசி இருந்தார்.