Youtube Premium வாங்கினால் இனி புதிய வசதிகள் கிடைக்கும்! என்ன ஸ்பெஷல்?

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
உலகளவில் மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான Youtube அதன் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இதனால் பிரீமியம் கட்டணம் செலுத்த மேலும் பலரை ஈர்க்கமுடியும் என்று Youtube நிறுவனம் நினைக்கிறது.

இந்த பிரீமியம் கட்டணத்தில் இனி பயனர்களுக்கு Background Music, Picture in Picture Support வசதி, Enhanced 1080P அல்லது முழு HD வீடியோ Resolution வசதி கிடைக்கும். அதிகரிக்கப்பட படங்களின் தரம் நிச்சயம் முன்பை விட சிறப்பானதாக இருக்கும் என்று Youtube தெரிவித்துள்ளது. இந்த புதிய வீடியோ தரம் ஏற்கனவே இருக்கும் 1080P மற்றும் 4K ஆகிய இரு வீடியோ தரங்களுக்கு இடையில் இடம்பெறும்.

இதனால் சராசரி பயனர்களுக்கு 1080P வீடியோ தரம் நீக்கப்படாது. அவர்களுக்கு இப்போதும் போலவே 1080P திரையில் வீடியோ பார்க்கமுடியும். ஆனால் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே Enhanced 1080P தரம் கிடைக்கும்.

தற்போது இந்த வசதி ioS பயனர்களின் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அதே நேரம் இதை நாம் பயன்படுத்த Settings சென்று 1080P Premium ஆப்ஷனுக்கு மாற்றினால் போதும். இதையும் ஸ்டாண்டர்ட் 1080P வெர்ஷன் திரை இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகள் என்ன? என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

இந்த இரண்டிலும் Bitrate மட்டுமே வித்தியாசப்படும் என்று Youtube தெரிவித்துள்ளது. இதனால் நமது கண்களுக்கு நேரடியாகவே இதன் வித்யாசம் தெரியும். ஆனால் இதில் அனைத்து வீடியோவிலும் இந்த பிரீமியம் ஆப்ஷன் இடம்பெறாது.

Youtube பிரீமியம் மாத சந்தா செலுத்தும் ஒரு திட்டம் ஆகும். இதில் நமக்கு விளம்பரங்கள் இல்லாத Youtube அனுபவம் கிடைக்கும். இதில் தனியாக Family Pack வசதியும் இருப்பதால் நமது குடும்பங்களில் உள்ள அனைவராலும் பயன்படுத்தமுடியும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.