உசிலம்பட்டி: சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளரா? என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்வைத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் முன்னாள் தலைவர் மூக்கையாதேவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: வெள்ளைக்காரனின் தூக்கு கயிற்றுக்கு துணிந்து கழுத்தை நீட்டிய மறவர்கள் நம் மன்னர்கள். இன்று லண்டனில் அந்த மன்னர்களின் படங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர்கள் செல்ஃபி எடுத்து கொள்கின்றனர். இதுதான் நாம் தமிழர் கட்சி சாதித்தது. படிக்கிற பழக்கம் நிறைய பிள்ளைகளுக்கு இல்லை. படிப்பீங்க.. பாடத்தை தவிர வேறு எதையும் படிப்பீங்களான்னு தெரியலை. ஆனால் படிச்ச நான் உங்க அண்ணன் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கனும் இல்லையா? இது ஒரு வரலாற்று வகுப்புன்னு நினைச்சுக்குங்க..
அக்ஷய் சின் என்ற இந்திய நிலப்பரப்பை நேரு எடுத்து சீனாவுக்கு கொடுத்துவிடுகிறார். கச்சத்தீவு விவகாரத்தில் இந்திரா காந்தி அம்மையாரை எதிர்த்து பேசுகையில், அக்ஷய் சின் நிலப்பரப்பை உங்கப்பா எப்படி சீனாவுக்கு கொடுத்தாரோ அதேபோல ஒரு வரலாற்று பெருந்தவறாக கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டீர்கள் என்றார். (அக்ஷய் சின் என்பது சீனா ஆக்கிரமிப்பு பகுதி. சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக இருந்தவர் நேரு. இதனால் இந்தியா- சீனா யுத்தம் வெடித்தது)
முதுகுளத்தூர் கலவரத்தில் முத்துராமலிங்க தேவரை சென்னை மத்திய சிறையில் அடைத்து வைக்கின்றனர் அப்போது மூக்கையாதேவர் அவரை சந்திக்க சென்றார். இந்த சந்திப்பின் போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலங்கி நின்று கண்ணீர் சிந்தினார். மக்கள் எப்படி இருக்கின்றனர் என கேள்வி கேட்டதாக எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டில் திராவிட பன்னிகளிட்ம் ரத்தம் குடிக்கிற உண்ணியாக இன்றுவரை காங்கிரஸ் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு காங்கிரஸை வீழ்த்த முக்கிய காரணம் மூக்கையா தேவர்.
சாதி வாரி இடஒதுக்கீடு எடுக்க வேண்டும். பீகாரில் என்ன பெரியார் பிறந்தாரா? நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறாரோ? ஏனெனில் அப்படி எடுத்தால் இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் ஆக்கிரமித்தது அம்பலமாகிவிடும் என்பதுதான்.

சொத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக 70 வயதில் திருமணம் செய்கிற பெரியார் புரட்சியாளராம்? தன் வாழ்வின் இறுதியில் சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்த முத்துராமலிங்கதேவர் சாதியாளரா? முத்துராமலிங்க தேவர்தான் புரட்சியாளர். இவ்வாறு சீமான் பேசினார்.