அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மூன்றாவது சிரார்த்த தினத்தையொட்டி பெரும் கண்காட்சி

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மூன்றாவது சிரார்த்த தினம் எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை கொழும்பு சௌமியபவனில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு தேசிய தலைவரது ஆளுமையை இளைய தலைமுறையினரும் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் கண்காட்சி ஒன்று இடம்பெற உள்ளதாக இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இக்கண்காட்சியில் அமரர் பயன்படுத்திய பொருட்கள் அவரது நினைவுகளின் நிழல்களாக விளங்கும் புகைப்படங்கள், விருதுகள், வரலாற்று பதிவுகளாக திகழும் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

இக்கண்காட்சியை பயனுள்ள வகையில் நடத்தவிருப்பதால் எமது மக்களும் தமது பங்களிப்பினை வழங்க வாய்ப்பளிக்க விரும்புகின்றோம். எனவே, உங்களிடம் அமரர் ஆறுமுகன் தொண்டமான் சமமந்தப்பட்ட புகைப்படங்கள், கடிதங்கள், குறிப்புக்கள் ஏதேனும் இருப்பின் அனுப்பி வைக்கவும். அவைகள் உங்கள் பெயர் விபரங்களுடன் கண்காட்சியில் இடம்பெறும். அமரரின் நினைவேந்தலை அர்த்தமுள்ளதாக அனைவரும் உள்வாங்கிக்கொள்ள கை கோர்ப்போம்.

மே மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியதாக சிரேஸ்ட ஊடக இணைப்பாளர், 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற தபால் முகவரிக்கோ அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மற்றும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ஆகிய மின்னஞ்சல் முகவரி ஊடாகவும், 071-9455222 என்ற வட்ஸ்எப் இலக்கத்தினூடாகவும் அனுப்பி வைக்கவும்.

மேலதிக விபரங்களுக்கு 071-6876548, 070-4329131 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புக்கொள்ளவும்.

 

இ.தொ.கா ஊடகப்பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.