கதக் : ”என் கார் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைக்க முயற்சித்தனர். இது என்னை கொலை செய்ய நடந்த முயற்சி,” என கதக் பா.ஜ., வேட்பாளர் அனில் மெனசினகாயி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக, கதக்கில் நேற்று அவர் கூறியதாவது:
நான் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றிருந்தேன். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் எச்.கே.பாட்டீலும் வந்தார். வேட்புமனு தாக்கல் முடிந்து, நான் திரும்பும் போது, காங்கிரஸ் ஊர்வலம் நடத்தியது. என் கார் முன் வந்து கோஷமிட்டனர்.
‘ஏன் இப்படி செய்கிறீர்கள்’ என, நான் கேள்வி எழுப்பிய போது, காங்கிரஸ் தொண்டர்கள், மோரை குடித்து என் மீது உமிழ்ந்தனர். கார் மீது செருப்பு, கற்களை வீசினர். பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முற்பட்டனர்.
கதக் மாவட்டத்தில், ரவுடிகளின் அட்டகாசம் எல்லை மீறியுள்ளது.
ஊர்வலம் நடந்த இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து, பெட்ரோல் கொண்டு வந்து, கார் மீது ஊற்றி தீ வையுங்கள் என, காங்., தொண்டர்கள் சிலர் கூறியதால், மற்றவர்கள் என் கார் மீது பெட்ரோல் ஊற்ற முயற்சித்தனர்.
அப்போது எங்கள் கட்சி தொண்டர்கள், பெட்ரோல் பாட்டிலை பறித்துக் கொண்டனர். எச்.கே.பாட்டீல் தோல்வி பயத்தால், தொண்டர்களை துாண்டி விடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement