சென்னை: வந்தே பாரத் ரயில் நாடு முழுக்க பெரிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்த ரயில் 10 நிமிடம் தாமதமாக வந்ததும், எதிர்பார்த்ததை விட குறைவான வேகத்தில் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை – கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை – கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.
அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.
அதேபோல் கோவையில் இருந்து பெங்களூருக்கு இன்னொரு வந்தே பாரத் ரயிலும் விரைவில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில் 90 கிமீ வேகத்தில்தான் செல்கிறது. 495 km தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடத்தில் கடக்கிறது. இது அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் 130 கிமீ தூரத்தை கூட தொட்டாலும் அதே வேகத்தில் செல்வது இல்லை. சராசரி வேகம் என்னவோ 90 கிமீ / 1 மணி நேரம்தான்.
திருவனந்தபுரம் ரயில்:இந்த நிலையில்தான் திருவனந்தபுரம் – கன்னூர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது. திருவனந்தபுரம் – கன்னூர் வந்தே பாரத் ரயில் 7. 20 மணி நேரத்தில் திருவனந்தபுரம் ஸ்டேஷனில் இருந்து கன்னூர் வந்தே பாரத் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது .
இந்த ரயில் வெறும் 70 கிமீ வேகத்தில்தான் பயணம் செய்துள்ளது. கன்னூரில் பிற்பகல் 2.10க்கு தொடங்கி இரவு 9.30 மணிக்குத்தான் இந்த ரயில் திருவனந்தபுரம் வந்துள்ளது.
சராசரியாக இரண்டு இடங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ரயில் பயணத்தை விட இது 10 நிமிடம் அதிகம் ஆகும். வந்தே பாரத் ரயில் இப்படி முதல் நாள் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது.

கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் வரை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்தின் போது 10 நிமிட தாமதம் காரணமாக திருவனந்தபுரம் கோட்ட அலுவலக ஊழியர் பி.எல்.குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆனால் கடைசியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக இவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
வந்தே பாரத் ரயில் 130 கிமீ வேகத்தில் செல்லும் என்றாலும், இதன் சராசரி வேகம் 84 கிமீதான். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கார் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவில் இந்த பதில் ரயில்வே துறை மூலம் அளிக்கப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் ரயிலால் 130 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தண்டவாளங்கள் தன்மையால் இந்த வேகத்தை எட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.