சாதனை படைத்த எலான் மஸ்க்.. விண்வெளிக்கு டூர் போறிங்களா ப்ரோ.?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நிலவு, புதன் கோள் மற்றும் அதற்கும் அப்பால் செல்லும் வகையில் புதிய ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

Video : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட்!!

எலான் மஸ்க்

அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர் எலான் மஸ்க். விண்வெளி ஆராய்ச்சிக்கான மலிவு விலை ராக்கெட்களைத் தயாரிக்கும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் கடந்த 2002ம் ஆண்டு தொடங்கிய எலான் மஸ்க், கனரக மின்வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தையும் அவர் விலைக்கு வாங்கினார். அதேபோல் ட்விட்டரையும் தற்போது வாங்கியுள்ளார்.

‘விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்து செல்வதே எனது இலக்கு, நான் சொல்வதை பார்த்து நீங்கள் சிரிக்கலாம். ஆனால் அது விரைவில் நடக்கும்’’ என கூறும் எலான் மஸ்க் உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். அதிநவீன சாதனங்கள், மேம்படுத்தபட்ட டெக்னாலஜி, எதிர்கால ஆற்றல் திறன் ஆகியவற்றை கொண்டு நவீன ராக்கெட்களை தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வருகிறார்.

டெக்னாலஜியின் காதலன்

ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்களின் தலைமை வடிவமைப்பாளரும் அவர்தான். அதேபோல் டெஸ்லாவிலும் பல்வேறு மேம்பட்ட வசதிகளை உள்ளடக்கிய புதிய மாடல் கார்களின் வடிவமைப்பில் சி.இ.ஓ. மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளரான அவருக்கு முக்கியப் பங்குள்ளது. நவீன தொழில்நுட்பங்களில் அதிக ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க்.

பூமியின் சுற்றுப்பாதையில் குறைந்த தொலைவில் விண்கலத்தை செலுத்தி கடந்த 2010ம் ஆண்டு மாஸ்காட்டிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 2012ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு தனது டிராகன் விண்கலத்தை அனுப்பி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. ஒரு அரசாங்கத்தால் மட்டுமே செய்யக்கூடிய இத்தகைய சாதனைகள் ஒரு தனியார் நிறுவனம் செய்தது அனைவரையும் ஆச்சிரியத்தில் உறைய வைத்தது.

வரலாற்று சாதனை
‘டீன் ஏஜ்’ மாணவர்களுடன் பள்ளியிலேயே ‘செக்ஸ்’.. கையும் களவுமாக சிக்கிய 6 ஆசிரியைகள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா!

இந்தநிலையில் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வை அரங்கேற்றியுள்ளது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். நிலவு, புதன் கோள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள விண்வெளி பகுதிகளுக்கு மனிதர்களை அழைத்து செல்லும் மிக வலிமையான ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து பரிசோதனை முயற்சியாக இந்த அதிநவீன ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. இதை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.