Leo: லியோ படத்தின் ஆடியோ லான்ச்..அதிரடியாக முடிவெடுத்த தளபதி..ரசிகர்களுக்கு செம ட்ரீட் கன்பார்ம்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
விஜய்யின் லியோ திரைப்படம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விஜய் உட்பட த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலி கான், அர்ஜுன், கௌதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணி, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், அனிருத்தின் இசை போன்ற விஷயங்கள் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய திரைப்படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

PS 2: பொன்னியின் செல்வன் 3 இருக்கா ? இல்லையா ?..பதிலளித்த மணிரத்னம்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எனவே லியோ திரைப்படம் வசூல் ரீதியாகவும், அதே சமயத்தில் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் உழைத்து வருகின்றார் விஜய். இந்நிலையில் விக்ரம் படத்தில் எப்படி உலகநாயகனை தன் பாணியில் காட்டினாரோ அதே போல லியோ படத்திலும் விஜய்யை தன் ஸ்டைலில் லோகேஷ் காட்டயிருப்பதால் இப்படம் விக்ரம் படத்தைப்போல மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதையடுத்து ஏற்கனவே லியோ படத்தை பற்றி பல அறிவிப்புகள் வந்துவிட்டதால் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டே வெளியாகும் என தெரிகின்றது. ஆனால் அவ்வப்போது இணையத்தில் சில பல தகவல்கள் கசிந்த வண்ணமே உள்ளன. அதே போல தான் சமீபத்தில் மலையாள நடிகர் லியோ ஜார்ஜ் லியோ படத்தில் விஜய்யின் அண்ணனாக நடிக்கின்றார் என ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இதைப்பற்றி எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது லியோ படத்தை பற்றி மேலும் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் மதுரை அல்லது கோவை போன்ற நகரங்களில் நடத்தவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

பொதுவாக விஜய்யின் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் தான் நடைபெற்று வருகின்றது. எனவே இம்முறை மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தில் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

இதனை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளார். எனவே விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.