Soori: 'விடுதலை' வெற்றி.. மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் சூரி: மாஸ் காட்றாரேப்பா.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சூரி. உச்ச நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து ஏகப்பட்ட காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சினிமாவில் சைடு கேரக்டர்களில் நடித்து வந்த சூரி, அதன்பின்னர் காமெடி நடிகர் தற்போது ஹீரோ என வேறலெவலில் மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் சூரியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த சூரி அண்மையில் வெளியான ‘விடுதலை’ படம் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக தரமான படங்களை இயக்கி வரும் வெற்றிமாறனின் ‘விடுதலை’ என்ற படைப்பின் கதாநாயகனாக முத்திரை பதித்துள்ளார் சூரி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் சூரியை கதையின் நாயகனாக வைத்து படம் இயக்க போகிறார் என்றதுமே கோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. தொடர்ச்சியாக தனது படங்களில் சமூக பிரச்சனைகள் குறித்து அனைவருக்கும் புரியும் படி பேசி வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி செட் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான ‘விடுதலை’ படத்தில் நியாயமான கான்ஸ்டபிள் குணசேகரன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை அள்ளியுள்ளார் சூரி. முதல் படத்திலே சூரி ஹீரோவாக முத்திரை பதித்து விட்டதாகவும், காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அனைத்து தரப்பினரும் பாராட்டி தள்ளினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ‘விடுதலை’ படத்தை பார்த்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Aishwarya Rai Daughter: ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த பரபரப்பு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

‘விடுதலை’ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளார் சூரி. இதனையடுத்து தற்போது ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. இந்தப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இது தவிர துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்திலும் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படத்திற்கான கதையை வெற்றிமாறன் எழுதவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக சூரி, வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. துரை செந்தில்குமார் ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹேய் எப்புட்றா.. ரெட் ஜெயன்ட் சொத்து மதிப்பு ரூ. 2000 கோடியா.?: உதயநிதி மரண கலாய்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.