Vijay: விஜய் அதற்காக ரொம்ப அடம்பிடிப்பார்..எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ் சினிமாவின் தளபதி விஜய் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவரது படங்களின் விமர்சனங்கள் முன்ன பின்ன இருந்தாலும் வசூலில் சாதனை படைத்தது வருகின்றது. படத்திற்கு படம் வசூல் சாதனை செய்து வரும் விஜய்யின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருகின்றது. தற்சமயம் விஜய் 125 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வருகின்றன.

அவ்வளவு ஏன், அவருக்கு 150 கோடிக்கும் மேல் சம்பளமாக கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர். அவரின் கால்ஷீட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.. அந்த அளவிற்கு விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்துள்ளது. இவ்வாறு விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து உயர மிக முக்கியமான காரணமாக இருந்தவர் தான் அவரின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

AK62: AK62 பஞ்சாயத்து..அஜித் எடுத்த அதிரடி முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய்யை தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக நிலைநாட்டி அவருக்கு சரியான படங்களை தேர்வு செய்து கொடுத்து விஜய்யை உச்ச நட்சத்திரமாக உயர்த்தியவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர். என்னதான் தற்போது இவர்கள் இருவருக்குள்ளும் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் விஜய்யின் திரைவாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவில் SAC மற்றும் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டனர். இதையடுத்து விஜய் அவர்களை சரியாக நடத்தவில்லை, கண்டுகொள்ளவில்லை என சிலர் விமர்சிக்க, அதெல்லாம் ஒன்றும் கிடையாதது என அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் விஜய்யின் தாயான ஷோபா சந்திரசேகர்.

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்து வரும் பேட்டிகளில் விஜய்யை பற்றி தவறாமல் பேசி வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த ஒரு பேட்டியில் விஜய் சிறு வயதில் செய்த குறும்புத்தனங்களை பற்றி ஜாலியாக பேசியுள்ளார்.

அதாவது விஜய் சிறு வயதில் பள்ளி முடிந்த பிறகு எப்போதும் வீட்டின் முன் வாசல் வழியாகவே வரமாட்டாராம். வீட்டின் பின் வாசல் வழியாகவே வந்து அங்கெ இருக்கும் பைப்பில் ஏறி தான் முதல் மாடிக்கு வருவாராம் விஜய். மேலும் விஜய்க்கு ஊசி போடுவது என்றால் அறவே பிடிக்காதாம்.

உடல்நிலை சரியில்லாத போது விஜய்க்கு ஊசி போடவேண்டும் என்றால் கத்தி அலறி அழுவாராம். அவரை சமாதானப்படுத்தி ஊசி போடுவதற்கு மிகப்பெரிய போராட்டமே நடக்கும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டிகளில் விஜய்யை பற்றி பேசினாலே அது செம வைரலாகி வரும் நிலையில் தற்போது அவர் விஜய்யை பற்றி பேசியதும் செம ட்ரெண்டிங்கில் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.