தேர்வு முடிந்ததை கொண்டாடிய சிறுவன் உயிரிழப்பு!!

10ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததை கொண்டாடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மகன் ஜீவகன், அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு பொதுத்தேர்வு நிறைவு பெற்றதை அடுத்து, விடுமுறையை கொண்டாட நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்றார்.

கடலில் நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் ஜீவகன் சிக்கினார். பதறி போன நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். மேலும் ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படையினரும் காப்பற்ற முயன்றனர்.

சிறிது நேர முயற்சிக்கு பிறகு மாணவன் ஜீவகன் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீஸார், மாணவனின் உடலை புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.