சென்னை: இப்படி ட்விட்டரில் ஒருவர் போடுகிறார்.. “நேத்து பெருங்களத்தூர் ட்ராஃபிக்க க்ராஸ் பண்றப்போ நண்பரிடம் இருந்து போன். என்ன தன்ஸ் ரைட் சைடு டோர்ல அடிபட்டு இருக்கு என. அடேய் எங்கடா இருக்க என்றேன்.உங்க பின்னாடிதான் என ஆரம்பிச்சு அப்படியே ப்ளான் மாறி டின்னர் போய்ட்டு வீட்டுக்கு கிளம்பும்போது மணி 10.”
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில், “இன்னைக்கு நைட்டு பெருங்களத்தூரை தாண்டிடுவ.. நீ”.. என்று பல மீம்களை பார்த்திருப்பீர்கள்.. பண்டிகை நாட்களில் இரவு 9 மணிக்கு கோயம்பேட்டில் பேருந்தில் ஏறுபவர், செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டை கடக்க கிட்டத்தட்ட இரவு 12 மணியை நெருங்கி விடுகிறது.
எல்லாருக்கும் தெரிந்த தகவல் என்றாலும், சில தகவல்களை இப்போது பார்ப்போம்.. சென்னைக்கு தமிழக மக்கள் வருவதற்கு மூன்று வழி இருக்கிறது. ஒன்று செங்கல்பட்டில் இருந்து பெருங்களத்தூர் வழியாக வரலாம், இதுதான் மெயின் வழி, அடுத்ததாக வேலூர் , காஞ்சிபுரம், பூந்தமல்லி வழியாக வரலாம், இது இரண்டாவது வழி, 3வது வழி, மகாபலிபுரம் வழியாக சென்னை வரலாம்.
இதில் பிரதானமான வழியான பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை உள்ள தூரம் தான், மக்களுக்கு பெரும் கஷ்டமாக இருக்கிறது. ஏதோ பேருந்தில் செல்பவர்களுக்குத்தான் இந்த நிலை என்று நினைத்துவிட வேண்டாம். கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கும் மிக கடினமான பாதையாக இருக்கிறது. கிண்டில் காரை இரவு 7 மணிக்கு எடுத்தால் பரனூர் டோல்கேட்டை தாண்ட கிட்டத்தட்ட 10 மணிக்கு மேல் சர்வசாதாரணமாக ஆகிவிடும். மிக கடுமையான வாகன நெருக்கடியே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம்.
பெருங்களத்தூரில் மேம்பாலம் போட்டுவிட்டார்கள். வண்டலூரிலும் மேம்பாலம் இருக்கிறது. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறைவில்லை. காரணம் மிதமிஞ்சிய வாகன போக்குவரத்து தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இருக்கிறது. ஒரு காலத்தில் பைப்பாஸ் போன்று தேசிய நெடுஞ்சாலையாக இந்த சாலைகள இப்போது மக்கள் நெருக்கம் மிகுந்த நகரத்திற்கு செல்லும் சாலையாக மாறிவிட்டது.
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை மாற்றுப்பாதையை உருவாக்க வேண்டும் என்று அரசு நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறது. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான உயர்மட்ட சாலையை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த பணிகளை செய்து வரகிறது.

8 வழிச்சாலையாக அமையும் இந்த பாதை திட்ட செலவு அமைப்பதற்கான மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு சுமார் 3500 கோடி ஆகும்.இதற்கான பணிகள் வேகமாக நடந்து முடிந்தால் மட்டுமே சென்னை முதல் செங்கல்பட்டு வரை செல்வது எளிதாக இருக்கும்.. ஏனெனில் சென்னை முதல் செங்கல்பட்டு வரை முழுமையாக நகரமாக உள்ளது. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை முழுயைமாக நகரமாக உள்ளது. எனவே வழக்கமான போக்குவரத்து நெருக்கடியுடன், மொத்த சென்னையும் உள்ளே மற்றும் வெளியே செல்ல மக்கள் வாகனங்களில் வருவதால் தாங்க முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைக்க உள்ள உயர்மட்ட நெடுஞ்சாலை பெருங்களத்தூர் தொடங்கி பரனூர் வரை செல்கிறது. அதேநேரம் பொத்தே ரயில் நிலையம் ,மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் கூடுவாஞ்சேரியில், பாலத்தை இணைக்கும் சாய்தள பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இது ஒருபுறம் எனில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்தால் ஓரளவு சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். ஆனால் பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டுமானால், உயர்மட்ட பால சாலை முடிந்தால் தான் சாத்தியம் ஆகும்.