நியூயார்க்:அமெரிக்காவில் பெட்ரோல் ‘பங்க்’கில் வேலை செய்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சையீஷ் வீரா, 24, என்ற இளைஞர், அமெரிக்காவில் படித்து வந்தார்.
இவர், கொலம்பஸ் நகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பகுதி நேர ஊழியராகவும் பணிபுரிந்தார்.
இந்நிலையில், கொலம்பஸ் போலீசாருக்கு, பெட்ரோல் பங்க்கில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடி வருவதாக தகவல் வந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், காயங்களுடன் இருந்த சையீஷை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, சிகிச்சை துவங்கிய சில நிமிடங்களிலேயே சையீஷ் உயிரிழந்தார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் படிப்பு முடிவடைய உள்ள நிலையில், இந்தியா திரும்ப முடிவு செய்திருந்த சையீஷ் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் பங்க்கில் நடந்த கொள்ளை சம்பவத்தை தடுக்க சையீஷ் முயன்றபோது, மர்ம நபர்அவரை சுட்டது தெரியவந்துள்ளது. கொலையாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement