புதுடில்லி, புதுடில்லியில் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுடில்லியில் உள்ள சாகேத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக ராதா, 40, என்பவர் நேற்று வந்திருந்தார்.
அங்கு வந்த ஒரு நபர் திடீரென ராதாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். இதில், ராதாவுக்கு வயிறு, கைகளில் குண்டுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது.
போலீஸ் விசாரணையில், சுட்டவர் சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து, பார் கவுன்சிலால் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட ராஜேந்திர ஜா என தெரிய வந்தது.
இவர், ராதாவுக்கு 25 லட்சம் ரூபாய் கடன் கொடுத்து, அவர் திருப்பித் தராததால் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement