சென்னை : பழைய வாகனத்தை வாங்குவதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டிய சோதனைகள் என்னென்ன என்பது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் கேள்வி ஒன்றையும் எழுப்பி பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். நமக்கு தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இதன்படி, பழைய வாகனத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை நாம் பார்ப்போம். பொதுவாக பழைய அல்லது பயன்படுத்தி இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் போது வண்டியின் கண்டிசன் எப்படி என்று பார்க்கும் பலர், வண்டி மீது வழக்கு இருக்கிறதா என்பதை பார்க்காமல் விட்டுவிடுகிறார்கள்.
எனவே வண்டியை வாங்கும் முன்பு வண்டியின் மீது எத்தனை கேஸ்கள் உள்ளன என்பதை பார்த்துவிடுங்கள். நீங்கள் வாங்கப்போகும் பைக் அல்லது காரின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன, இன்சூரன்ஸ் கரண்ட்டாக உள்ளதா, முந்தைய வாகனத்தின் உரிமையாளர்(கள்) யார் யார்? வண்டியின் டாக்குமெண்டுகள் ஒரிஜினலா என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
ஏனெனில் இப்போது எல்லாம், இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் இல்லாமல் செல்வதை போட்டோ எடுத்து அனுப்பினாலே, அபராதம் குறித்து போலீஸ் நோட்டீஸ் அனுப்புகிறது. செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டினாலோ அல்லது அதிவேகத்தில் வண்டி ஓட்டினாலோ, சிக்னலில் கிராசிங் லைனை தாண்டி நின்றாலோ, மூன்று பேர் ஒரே வாகனத்தில் சென்றாலோ, ஒரே ஒருபுகைப்படத்தை யாராவது அனுப்பினால் கூட அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் அதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு வாகனம் ஒரு முறை குடிபோதையில் ஓட்டியதாக சிக்கினலோ 10 ஆயிரம் என்கிற போது, ஹெல்மெட் அணியாமல், செல்போன் பேசிய படி ஓடிட்டினால் அபராதம் சில ஆயிரம் அதிகமாகும். இன்சூரன்ஸ் இல்லை என்றாலோ அல்லது சிறார்கள் ஓட்டி சென்றாலோ மொத்தமாக வாகனத்தின் மீது சர்வ சாதாரணமாக 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் என்கிற அளவிற்கு கூட அபராதம் நிலுவையில் இருக்கும்.

எனவே பழைய பைக் அல்லது கார் வாங்கும் போது, நீங்கள் வாங்கப்போகும் வாகனத்தின் இன்ஜின் எப்படி, சைலென்சர் எப்படி, வானத்தின் பேப்பர் எப்படி, வாகனத்தின் சக்கரங்கள் எப்படி, பேட்டரி எப்படி என்று மெக்கானிக்கை கூட்டிச் சென்று தீவிரமாக ஆராயும் நீங்கள், கண்டிப்பாக என்னென்ன அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆன்லைனில் செக் செய்து கொள்ளுங்கள். அப்படி செக் செய்யாமல் வாகனத்திற்கு அட்வான்ஸ் கொடுத்தால் உங்களுக்குதான் சிக்கலாக முடியும். அந்த அபராதத்தை நீங்கள் தான் போக்குவரத்து காவல்துறைக்கு கட்ட வேண்டியதிருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம் , நீங்கள் வாங்க போகும் வாகனத்தில் ஏதாவது சட்டவிரோதமான செயல்கள் நடந்திருந்தால், அதற்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் நீங்களே கட்டண வேண்டிய நிலை ஏற்படும். எனவே மக்களே, தயவு செய்து தேவையான அனைத்து பார்மாலிட்டிசையும் கன்பார்ம் பன்னிட்டு வாகனத்தை பெயர் மாத்துங்க. நன்றி.