என்னையும்.. முதல்வர் ஸ்டாலினையும் பிரிக்கவே முடியாது.. அடித்து சொன்ன பிடிஆர்.. இதை கவனிச்சீங்களா!

சென்னை: நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் என் தலைவர்.. திமுக தலைவர்.. முதல்வர் ஸ்டாலின் காரணமாக மட்டுமே. எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த ஆடியோவில் உண்மைத்தண்மை அறியப்படவில்லை. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று இதை பற்றின் நீண்ட அறிக்கை வெளியிட்டார்.

இனிமேல் இது போன்ற பொய்யான அவதூறுகளை நான் புறக்கணிப்பேன் என்று கூறி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சர்ச்சை ஆடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில், என்னை பொது சமூகத்தில் வில்லன் போல் சித்தரிக்கிறார்கள். அவர்கள் தங்களின் தோற்றத்தை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள்.

என்னை இந்த அரசுக்கு எதிரான ஒரு தனிப்பட்ட போராளி போல் அவர்கள் சித்தரிக்க காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் என் தலைவர்.. திமுக தலைவர்.. முதல்வர் ஸ்டாலின் காரணமாக மட்டுமே. எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது.

இதனால் இந்த ஆடியோவிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். இந்த தவறான, பொய்யான வீடியோவை அரசியல் தொடர்பற்ற சிலரும், ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. தற்போது பரவி வரும் ஆடியோ முழுக்க முழுக்க பொய்யானது.

You cant break my relationship with CM Stalin says PTR Palanivel Thigarajan on his explanation on Audio

எளிதில் அணுகக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனையப்பட்ட அல்லது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ கிளிப்களை உருவாக்கும் திறன் தற்போது உலகம் முழுக்க உள்ளது. இதன் மூலம் வரும் நாட்கள் மற்றும் மாதங்களில் அதிக தீங்கிழைக்கும் உள்ளடக்கத்துடன் அதிகமான ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்கள் வெளியானாலும் அதை கண்டு நாம் ஆச்சரியப்பட கூடாது.

இந்த பொய்யான ஆடியோவை கிளிக் பைட் செய்தியாக வெளியிட வேண்டாம். நான்காம் தூணாக இருக்கும் ஊடகங்கள் இது போன்ற பொய்யான ஆடியோக்களுக்கு பின்னால் செல்ல வேண்டாம். அது மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும்,

இந்த சமீபத்திய ஆடியோக்கள் பற்றிய என்னுடைய ஒரே கடைசி அறிக்கை இதுதான். இனிமேல் இது போன்ற பொய்யான அவதூறுகளை நான் புறக்கணிப்பேன். இத்தகைய அவதூறுகள் என்னுடைய சகிப்புத்தன்மை மிஞ்சும் அளவிற்கு இருந்தால், நான் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

வழக்குத் தொடர, அதை விசாரிக்க பல மாதங்கள் ஆகும் என்பதை நான் உணர்ந்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் சிலருக்கு விளம்பரத்தை கொடுக்கும். நான் வழக்கு தொடுப்பது சிலருக்கு தேவைற்ற விளம்பரத்தை கொடுக்கும் என்பதால் அதை செய்ய மாட்டேன், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

You cant break my relationship with CM Stalin says PTR Palanivel Thigarajan on his explanation on Audio

அண்ணாமலை:இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த விமர்சனத்தில், நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல; அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் தமிழக நிதியமைச்சரை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம், என்றும் பாஜக அண்ணாமலை கூறி உள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.