வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று(ஏப்ரல் 24) 2வது நாளாக மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தன. இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின், பாலியல் தொடர்பாக விசாரிக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
2வது நாள் போராட்டம்:
பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என நேற்று(ஏப்ரல் 23) மீண்டும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2வது நாளான இன்றும்(ஏப்ரல் 24) மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து வீராங்கனை வினிஷ் போகத் கூறுகையில், கடந்த முறை நாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டோம். இந்த முறை இந்த வழக்கில் எந்த வித அரசியலும் இருக்காது என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அழைப்பு:
பஜ்ரங் புனியா கூறுகையில், இந்த முறை எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ், பாஜ., ஆம் ஆத்மி அல்லது வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் பங்கேற்கலாம். எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது. எங்கள் போராட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளும் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement