
அரசியலுக்கு அச்சாரம்: வாக்காளர் விபரங்களை திரட்டும் விஜய்
விஜய்க்கு அரசியல் ஆசை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். மக்கள் இயக்கத்திற்கென்று தனி அலுவலகம் தொடங்கப்பட்டு அடிக்கடி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றனர். சமீபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்டம் வாரியாக மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடந்தது.
இந்த நிலையில் தற்போது தனது அரசியல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதி வாரியாக வாக்காளர் விபரங்களை மக்கள் இயக்கத்தின் மூலம் திரட்டி வருகிறார். மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட்டால் தொகுதிவாரியாக எத்தனை வாக்குகள் பெற முடியும் என்கிற தகவலையும் திரட்டி வருகிறார். இந்த பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகிறார்கள்.
தென் மாவட்டங்களில் தனக்கு இருக்கும் செல்வாக்கை கணக்கிட வரவிருக்கும் லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை தென் மாவட்டம் ஒன்றில் திறந்த வெளி மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.