சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்தே சினிமா வட்டாரத்தில் அந்த டாபில் செம ஹாட்டாக மாறி உள்ளது.
ஆகஸ்ட் 11ம் தேதி மாவீரன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள சிவகார்த்திகேயன் இமிடியேட்டாக இன்னொரு படத்தையும் இந்த ஆண்டு களமிறக்கி தனது ரசிகர்களை சந்தோஷத்தில் மிதக்க வைக்கப் போகிறார்.
ஆனால், பயம் எங்கே ஆரம்பிக்கிறது என்றால் அந்த தீபாவளி ரிலீஸ் படமான அயலான் தான் என்கின்றனர்.
இன்று நேற்று நாளை பட இயக்குநர்: 2015ல் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக அயலான் திரைப்படம் உருவாகி உள்ளது. ஆனால், 2015ல் இருந்து 2023ல் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இடைவெளியில் அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார் ரவிக்குமார்.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் பல தடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு வெளியாகப் போவதே ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் தான். ஆனால், படத்தின் ரிசல்ட் அந்தளவுக்கு பக்காவாக இருக்குமா? என்பதில் தான் டவுட்டே வருவதாக சினிமா ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி ரிலீஸை டார்கெட் செய்யும் சிவகார்த்திகேயன்: விஜய்யின் லியோ ஆயுத பூஜையை டார்கெட் செய்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்தின் ஜெயிலர் வருமா, கமல்ஹாசனின் இந்தியன் 2 வருமா? என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்து வரும் நிலையில், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நான் வரேன் இந்த தீபாவளிக்கு என அயலான் படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
அங்கே தான் சிக்கல்?: கடந்த ஆண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் தீபாவளி ரிலீஸை டார்கெட் செய்து தான் பிரின்ஸ் படத்தை களமிறக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை கொஞ்சம் கூட ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் படு தோல்வியை சந்தித்தது.

அதே போன்ற ஒரு பிரச்சனையில் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டும் ஒருவேளை சிக்கி விடுவாரோ என்கிற விவாதம் சினிமா வட்டாரத்தில் பரவலாக அடிபட்டு வருகிறது. பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அயலான் படத்தை ஒரு வழியாக இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய உள்ள நிலையில், அதனை தீபாவளி ரிலீசாக சிவகார்த்திகேயன் வெளியிடுவதில் அவருக்கு சிக்கல் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
ஜாக்பாட்டும் இருக்கு: மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள மாவீரன் படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்தாலே அந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி மாஸ் காட்டும் என்பதில் எந்தவொரு டவுட்டும் இல்லை. ஆனால், தீபாவளிக்கு வெளியாக உள்ள அயலான் திரைப்படம் சறுக்கினால் மீண்டும் சிவகார்த்திகேயன் சிறிய பின்னடைவு ஏற்படும்.

அதே சமயம் இன்று நேற்று நாளை என்கிற தரமான படத்தைக் கொடுத்து ஹிட் அடித்த ரவிக்குமார் ஏலியன் சப்ஜெக்ட் படமான அயலான் படத்தை வெளியிட்டு தீபாவளிக்கு குழந்தைகள் பெற்றோர்களுடன் குடும்பம் குடும்பமாக பார்க்கச் சென்றால் டபுள் ஜாக்பாட்டை இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் அடித்து விடவும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.
கிளாஷ் பிரச்சனை: அதே நேரத்தில் கண்டிப்பாக இந்த ஆண்டு தீபாவளிக்கு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இயக்கி வரும் இந்தியன் 2 என இரு படங்களில் ஏதாவது ஒரு படத்துடன் அயலான் கிளாஷ் ஆனாலும் அயலான் படத்துக்கு பலத்த அடி கன்ஃபார்ம் என்கின்றனர். நல்லதே நடக்கும் என நினைத்து பல வருட உழைப்பை சிவகார்த்திகேயன் இந்த தீபாவளியில் அறுவடை செய்ய நினைத்துள்ள நிலையில், அது சரியாக நடக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்!