பள்ளி மாணவனாக நடிக்கும் அசோக் செல்வன்

30 வயதை கடந்து விட்ட நடிகர்கள் பள்ளி மாணவனாக நடிப்பது எப்போதுமே சவாலான ஒன்று, நடிகர்கள் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் பள்ளி மாணவனாக நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷன் பள்ளி மாணவனாக நடித்திருந்தார். தற்போது அந்த வரிசையில் அசோக் செல்வனும் 'சபா நாயகன்' என்ற படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருக்கிறார். இதில் அவர் கல்லூரி மாணவனாகவும் நடித்திருக்கிறார். பள்ளியில் தொடங்கும் காதல் கல்லூரி வரை வருகிற கதை. ரொமாண்டிக் காமெடி ஜார்னரில் படம் தயாராகி வருகிறது.
மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, அருண் குமார் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.