சென்னை: Jayam Ravi (ஜெயம் ரவி) ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாக ரெடியாகும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக திகழ்வது பொன்னியின் செல்வன். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அமரர் கல்கி எழுதிய இந்த நாவல் காலங்கடந்து இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையையும், புனைவையும் கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் பல்லாயிரம் பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் இந்தத் தலைமுறையும் ஆர்வமாக படித்துவருகின்றனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானது:மணிமகுடமாக திகழும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க எம்ஜிஆர் முதலில் முயன்றார். இதற்காக இயக்குநர் மகேந்திரனும் திரைக்கதை எழுதும் பணியில் தொடங்கினார். ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படவே இல்லை. இதனையடுத்து கமல் ஹாசனின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இப்படி பொன்னியின் செல்வன் படமாவது தள்ளிப்போய்க்கொண்டே இருக்க இறுதியாக அந்தத் திட்டத்தை கையில் எடுத்தார் மணிரத்னம்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிப்பில் கடந்த வருடம் வெளியானது பொன்னியின் செல்வன் திரைப்படம்.
வசூலில் கெத்து காட்டிய பொன்னியின் செல்வன் திரைப்படம்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவர்கள்; தங்களது எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்யவில்லை என்ற வருத்தத்தை தெரிவித்தனர்.
இருப்பினும் படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் சரித்திர நாவல்களை படமாக்குவதற்கு பல இயக்குநர்களுக்கு நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இந்தப் பாகமும் பிரமாண்ட வெற்றி பெறும் என்று ரசிகர்களும், படக்குழுவினரும் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் படத்துக்கான் புரோமோஷனில் படக்குழுவினர் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.

எமோஷனல் ஆன ஜெயம் ரவி, கார்த்தி: அந்தவகையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று புரோமோஷனில் ஈடுபட்டுவருகின்றனர் அவர்கள். சமீபத்தில் மும்பை சென்ற படக்குழுவினர் அங்கு புரோமோஷனில் ஈடுபட்டனர். அப்போது படத்தில் நடித்தது குறித்து கார்த்தி எமோஷனலாகி கண் கலங்கினார். அதேபோல் மற்றொரு இடத்தில் நடந்த புரோமோஷனில் பேசிய ஜெயம் ரவியும் எமோஷனலாகி கண் கலங்கினார். அதனையடுத்து அவரை ரசிகைகள் கட்டி அணைத்து ஆறுதல்படுத்தினர்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி சோழன் (ராஜ ராஜ சோழன்) கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி அந்த கதாபாத்திரமாக எப்படி மாறினார் என்பது தொடர்பான புதிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜெயம் ரவி ரொம்பவே டெடிகேஷனாக இருந்திருக்கிறார் என கமெண்ட் செய்துவருகின்றனர்.