சிங்கப்பூர், சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தங்கராஜு சுப்பையா நேற்று துாக்கிலிடப்பட்டார்.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், கடுமையான சட்டம் அமலில் உள்ளது. இதை பரிசீலிக்க, ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே, சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில், 2014ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தங்கராஜு சுப்பையா, 46, கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், 2018 அக்டோபரில் அவருக்கு துாக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
துாக்கு தண்டனையை எதிர்த்து, தங்கராஜு சுப்பையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
கடைசி முயற்சியாக, கடந்த 25ல், துாக்கு தண்டனையை எதிர்த்து, தங்கராஜு சுப்பையா, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ‘தண்டனையை மறுபரிசீலனை செய்ய நியாயமான கோரிக்கை இல்லை’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சாங்கி சிறை வளாகத்தில் நேற்று தங்கராஜு சுப்பையாவுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தங்கராஜு சுப்பையாவின் துாக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு, ஐ.நா., மனித உரிமை அமைப்பு உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement