வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ராமநவமியின் போது நடந்த வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் ராமநவமியை முன்னிட்டு, ஊர்வலங்கள் நடந்தது. அப்போது ஹூக்ளி, ஹவுரா, வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கடைகள் சூறையாடப்பட்டதுடன், தீவைக்கப்பட்டன. இது தொடர்பாக பா.ஜ., மற்றும் அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி குற்றம்சாட்டின.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பா.ஜ.,வை சேர்ந்த சுவேந்து அதிகாரி தொடர்ந்த வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
வன்முறை தொடர்பான வழக்குகளை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும். இந்த அமைப்பு விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, அனைத்து ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை மத்திய அரசிடம் , போலீசார் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement