சென்னை: இன்று டெல்லியில், பாஜக தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. அத்துடன் சீட் ஷேரிங், தொகுதிகள் குறித்தும் மேலிட தலைவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
நடக்க போகும் எம்பி தேர்தலில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க போகிறதா? இல்லையா? என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்தபடியே வந்தது. ஆனால், மெகா கூட்டணி என்பதில் மட்டும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார்..
எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து அதிமுக சீனியர்களுக்குள் ஏற்கனவே பலமுறை ஆலோசனைகளை நடத்தியதாகவும் தெரிகிறது.
இப்படித்தான் கடந்த மாதம் ஒரு தகவல் கசிந்தது.. அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் சேர்த்து, 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடபோவதாகவும், மீதமுள்ள 17 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து வழங்க திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.
ஒற்றை இலக்கு: அதாவது அதிமுக கணக்குப்படி, பாஜகவுக்கு “ஒற்றை” இலக்க தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்றே தெரிகிறது.. இதற்கு சம்மதிக்க வைக்கத்தான், டெல்லி பாஜகவிடம், அதிமுகவின் தூதரை அனுப்பி அப்போதே முதல்கட்ட பேச்சு நடத்தினாராம் எடப்பாடி பழனிசாமி.. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைய தினம் டெல்லிக்கு சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது, அமித்ஷாவிடம் சீட் விவகாரம் குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தெரிகிறது.
அமித்ஷாவுடன் சந்திப்பு: அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், வேலுமணி, கேபிமுனுசாமி சந்தித்து பேசினார்கள்.. இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருந்திருக்கிறார்.. அப்போது, எம்பி தேர்தலில், தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பதை இப்போதே சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா கேட்டதாக கூறப்படுகிறது…
அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக இந்த முறை, மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைக்க இருப்பதால், இப்போதே எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாராம்.. எப்படி பார்த்தாலும், 5 முதல் 7 தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கும் என்கிறார்கள் விவமறிந்தவர்கள்.. இதனிடையே, மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், பிரபல சேனல ஒன்றிற்கு பேட்டி தந்துள்ளார்..
அதில், “இந்த சந்திப்பில் தேசிய தலைவர் நட்டாவும் அந்த மீட்டிங்கில் இருந்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த மீட்டிங்கில் இருந்துள்ளார்.. இதுவரை அண்ணாமலையுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக பேச்சுவார்த்தை எதையும் நடத்தாத நிலையில், இன்று டெல்லியில் வைத்தே அமித்ஷா முன்னிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.. பாஜக தரப்பில் 3 தலைவர்களும், அதிமுக தரப்பில் 6 தலைவர்களும் இந்த மீட்டிங்கில் அமர்ந்து பேசியிருக்கிறார்கள்.
என்ன பேசினார்கள்: பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன்.. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மீட்டிங் முடிச்சிட்டு வெளியே வரும்போது, எடப்பாடியின் முதுகில் அமித்ஷா தட்டிக்கொடுத்துள்ளார்.. “Aanewale Chief minister.. Congrats” (வாருங்கள் எதிர்கால முதலமைச்சரே.. வாழ்த்துக்கள்) என்று தெரிவித்ததாக அமித்ஷா கூறியிருக்கிறார்.. இதை எனக்கு, ரொம்ப ரொம்ப நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்னார்கள்.

கூட்டணி பேச்சுவார்த்தையில், சீட் எத்தனை என்பது உட்பட எந்தெந்த இடங்களில் போட்டி என்பது வரை பேசியிருக்கிறார்கள்.. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியிடம், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பாஜக தரப்பில் கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.. எம்பி தேர்தலில், பாஜக 13 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 39-ல் 13 சீட்டுக்களை ஒதுக்க எடப்பாடியும் சம்மதித்துள்ளார்..
எண்ணிக்கை குறையாது: இந்த சீட் எண்ணிக்கைக்கு மேலேயே பாஜகவுக்கு அதிமுக தரப்படும் என்கிறார்கள்.. இணக்கமான சூழலில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.. இறங்கி வந்திருக்கிறது அதிமுக.. நெகிழ்வுத்தன்மையுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.. இந்த பேச்சுவார்த்தையின்போது, எம்ஜிஆரின் பழைய பார்முலாவை, எடப்பாடிக்கு பாஜக தரப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.. அதாவது, நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கு மூன்றில் ஒரு பங்கை கூட்டணி கட்சிக்கு கொடுப்பது எம்ஜிஆரின் வழக்கம். காங்கிரசுக்கு அப்படித்தான் அன்று ஒதுக்கப்பட்டது..
உறுதியான தகவல்: அதுபோல, சட்டப்பேரவை தேர்தலின்போது, அதிமுகவுக்கு மூன்றில் 2 பங்கில் போட்டியிடும்.. இதைத்தான் பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டி, தேசிய கட்சி மற்றும் மாநில கட்சிகள் சீட் விவகாரத்தில் எம்ஜிஆர் எப்படி கையாண்டார் என்பதை சொல்லி, எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்துள்ளது பாஜக.. எடப்பாடியும் இதற்கு சம்மதம் தந்துள்ளார்.. ஆக, 15 சீட் வரை பாஜகவுக்கு கிடைக்கும் என்கிறார்கள்.. ஆனால் 13- சீட்டுக்கு குறையாமல் சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது நிச்சயமான தகவல்.. உறுதியாக சொல்கிறேன்.. இது நம்பகமான தகவலும்கூட” என்றார்.