இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் திடீரென பெண்கள் கல்லறைகளில் பூட்டுகளைப் போட்டு வைக்கிறார்கள். இதற்கான காரணம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் இப்போது மிக மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உச்சம் தொட்டுள்ளது.
இந்த பொருளாதார குழப்பம் அங்கே அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்துள்ளது. அங்கே பிரதமராக இருக்கும் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
பாகிஸ்தான்: இது ஒரு பக்கம் இருக்க அங்கே பல ஷாக் சம்பவங்களும் நடந்து வருகிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது அங்கே நடந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பல கல்லறைகளில் பூட்டுப் போட்டு வைக்கும் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், இப்போது அது வெளியாகி அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
அதாவது பாகிஸ்தான் பெற்றோர்கள் தங்கள் இறந்த மகள்களைக் கூட பலாத்காரத்தில் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளதாகவும் இதன் காரணமாகக் கல்லறைக்கும் பூட்டுப் போட்டு வைக்க வேண்டி இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். பாகிஸ்தான் நாட்டில் பிணத்துடன் பாலியல் உறவு கொள்ளும் நெக்ரோபிலியா கேஸ்கள் அதிகரித்துள்ளதே பெற்றோர்கள் இதுபோல செய்யக் காரணமாக இருக்கிறது.
பூட்டு: பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். கடும் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடாகக் கூறிக் கொண்டாலும் பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் பெண்களின் கல்லறைகளில் கூட பூட்டுகள் போடப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஹாரிஸ் சுல்தான் இது குறித்துக் கூறுகையில், “கடுமையான இஸ்லாமியச் சித்தாந்தமே இதற்குக் காரணம். பாகிஸ்தான் பாலியல் விரக்தியுள்ள சமூகத்தை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாகவே இப்போது பாகிஸ்தான் மக்கள் தங்கள் இறந்த மகள்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்க அவர்களின் கல்லறைகளில் பூட்டுகளைப் போட்டுப் பூட்டுகிறார்கள். இதற்கு இங்கே இருக்கும் சில கடுமையான கட்டுப்பாடுகளே காரணம்” என்கிறார்.
சடலங்களுடன் உடலுறவு: வக்கிர எண்ணம் கொண்ட சிலர் தங்கள் இச்சையைத் தணிக்க இறந்த உடல்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். பாகிஸ்தானில் பரவலாக அதிகரிக்கும் இந்த நெக்ரோபிலியாவை கருத்தில் கொண்டு அங்குள்ளவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற இப்படி கல்லறைக்கும் பூட்டை போட்டு வைக்கிறார்கள். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இது குறித்து நெட்டிசன் ஒருவர், “பாகிஸ்தான் உருவாக்கிய சமூகச் சூழல் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை உருவாக்கியுள்ளது. இது எல்லை மீறிச் சென்று இப்போது அங்குள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்லறையை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பலாத்காரத்தை ஆடையுடன் இணைத்து கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால் அது இங்கே தான் முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
அவமதிப்பு: பாகிஸ்தான் நாட்டில் பெண்களின் உடல்கள் பல நேரங்களில் தோண்டி எடுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கராச்சியின் வடக்கு நாஜிமாபாத்தில் உள்ள கல்லறையில் பணிபுரியும் முஹம்மது ரிஸ்வான் என்ற காவலர் 48 பெண் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். அங்கே 2011ஆம் ஆண்டு முதலே இதுபோன்ற நெக்ரோபிலியா வழக்குகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வன்முறையை அனுபவிப்பதாகவே அந்நாட்டின் மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம் கூறுகிறது.